
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சியில் மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் குழந்தைகள் வார்டில் திடீரென பயங்கர தீவு பற்றி ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் மொத்தம் 54 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 குழந்தைகள் உயிரோடு எரிந்து பலியானது. அதாவது குழந்தைகள் வார்டில் ஆக்ஸிஜன் அதிக அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவி பயங்கர செய்தத்தை உண்டாக்கியது.
இதில் புதிதாக பிறந்த 10 குழந்தைகள் பலியான நிலையில் மீதமுள்ள 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் 16 குழந்தைங்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.