நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் அவர் தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய கடைக்கு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சில மாணவிகள் சாக்லேட் வாங்குவதற்காகவும் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காகவும் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களின் செல் போன் நம்பரை தெரிந்து வைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் அவர் ஆசை வார்த்தைகளை கூறி பழகி வந்தார். அவருடைய பேச்சில் மயங்கிய 5 மாணவிகளை தனித்தனியாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பின்னர் அனைவரையும் அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் மாணவிகளுக்கு தெரிய வரவே உடனடியாக அவர்கள் குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அவர் ஐந்து மாணவிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

பின்னர் இது தொடர்பாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.