
எந்த ஒரு காலத்திலும் இபிஎஸ்-யிடம் யாசகம் கேட்கமாட்டேன் என ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. இதை புரிந்து கொண்டு தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கழகத்தை பலப்படுத்துவதற்கு “10 தோல்வி” பழனிசாமி பதவி விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக மறுக்கும் பட்சத்தில் தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலை உருவாக்குவார்கள் .
கட்சியில் சேர்க்குமாறு தான் கோரிக்கை வைக்காத நிலையில், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என இபிஎஸ் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் அவரை தொண்டர்கள் நிராகரித்துவிட்டதாகவும், 2026இல் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமானால் தலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.