நொய்டாவைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை ட்விஷா ஷர்மா, போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் கொல்லப்பட்டதாக ட்விஷாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகையின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சமர்த் சிங்கை பிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிரிபலா சிங்கின் வழக்கறிஞர் ஏனோஷ் ஜார்ஜ், விசாரணை தொடர்பான கேள்விகளை எழுப்பிய பத்திரிகையாளர்களை ஆக்ரோஷமாக திட்டியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரிபலா சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வருவதால், அவருக்கு மூன்றாவது முறையாக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“>

இதனால் முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் வழக்கறிஞர் ஏனோஷ் ஜார்ஜிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் மிகுந்த கோபத்துடன் பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேறச் சொன்ன வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இது ட்விஷா ஷர்மா குடும்பத்தினரிடையே ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.