அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை பிடித்தவர். அவர் ஒரு சுயநலவாதி. அவர் இருக்கும் வரை அதிமுக என்ற கட்சி ஒன்று சேர வாய்ப்பே கிடையாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில் அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஒரு கருத்து பரவி வரும் நிலையில், அதனை அதிமுகவினரே மறுத்து வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் ‌ அதிமுக வலுப்பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக கட்சி ஒன்று சேர வாய்ப்பே கிடையாது என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.