பிரபல நடிகரான விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் விஜய் பயணித்த வாகனத்தின் மீது ஏறி அட்ராசிட்டி செய்தனர்.

ரசிகர்கள் இப்படி நடக்க கூடாது. அவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என நேற்று விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் தனது கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் செல்கிறேன். மதுரையில் என்னை ரசிகர்கள் பின் தொடர வேண்டாம். என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் ஃபாலோ பண்ணாதீங்க. பைக்கில் வேகமாக வருவது, மேலே நின்னுகிட்டு பைக் ஓட்றது, ஹெல்மெட் இல்லாமல் வர்றது. இந்த காட்சிகளை பார்க்க மனசுக்கு பதட்டமாக இருக்கு என கூறியுள்ளார்.