கரூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கீதாவின் ஆவணங்களை திருடி, அவற்றின் மூலம் கடன் பெற்று கார் வாங்கியதாக ராஜா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவரை தவெக நிர்வாகி என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, தவெக கரூர் மாவட்ட தலைவர் மதியழகன், ராஜாவுக்கும் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், ராஜாவுக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.