திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (எ) சுடலைமணி(29). இவர் மானூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் சுடலைமணியை நோட்டமிட்ட போது அவர் கொலை முயற்சி வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது உறுதியானது. எனவே சுடலைமணி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு இன்ஸ்பெக்டர் எஸ்.பி. யிடம் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து எஸ்.பி. யின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சுகுமார் சுடலைமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சுடலைமணியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.