
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த Olga Leontyeva எனும் பெண் தபால் ஊழியர் கடந்த 24ஆம் தேதி 9 மோடி கட்டிடம் ஒன்றிற்கு தபால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கட்டிடத்தின் லிப்ட்டில் சிக்கியுள்ளார். தன்னை காப்பாற்றும் படி சத்தமிட்டும் யாருக்கும் அது கேட்காததால் அவர் லிப்டில் சிக்கி இருப்பது யாருக்கும் தெரியாமல் போனது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளிக்க காவல்துறையினர் விசாரணையை துவங்கினர்.
அவரது தொலைபேசி எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய காவல்துறையினர் முயன்ற நிலையில் லிப்டில் அவர் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது சுமார் மூன்று நாட்களாக அவர் அந்த லிப்டில் சிக்கி தவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவரது ஆறு வயது மகள் உறவினர்களின் பாதுகாப்பில் இருக்கிறார்.