
சென்னை மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் முத்துக்கிருஷ்ணன்(57) என்பவர் 13-வது பிரிவில் உதவி கமாண்டமாக வேலை பார்த்து வ ருகிறார். இவர் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டாலியனில் வேலை பார்ப்பவர்கள் விடுமுறை மற்றும் பர்மிஷன் கேட்கும்போது அவர்களிடமிருந்து 2000 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை G pay மூலம் பெற்றுக்கொண்டு முத்துகிருஷ்ணன் விடுமுறை அளித்துள்ளார்.
இதனால் முத்துகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இதனால் டிஜிபி ஜெயராம் முத்துகிருஷ்ணனை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் முத்துக்கிருஷ்ணனின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் முத்துகிருஷ்ணன் பணம் வாங்கியது உறுதியானது. இதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் முத்துக்கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.