பாரம்பரியத்திற்குப் பெயர் போன மகாராஷ்டிராவின் பெருமைமிகு ‘பைதனி’ (Paithani) பட்டுப்புடவையை வைத்து தற்போது வெளியாகியுள்ள ஒரு வினோத விளம்பரம் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“பாரம்பரிய ஆடை.. நவீன ஸ்டைலில்” என்ற வாசகத்துடன், பைதனி பட்டுத் துணியில் தைக்கப்பட்ட அரைக்கால் சட்டையின் (Shorts) புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “கௌரவமான ஒரு ஆடையை இப்படி அவமானப்படுத்துவதா?” என ஆவேசமடைந்துள்ளனர். “புடவையில் இருக்கும் மயில் டிசைனை இவ்வளவு கீழ்த்தரமாகவா பயன்படுத்துவது? இது அருவருப்பானது” எனப் பலரும் விளம்பரதாரர்களை வறுத்து எடுத்து வருகின்றனர்.

ஒரு தரப்பினர் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். எது எப்படியோ, நளினத்திற்குப் பெயர் போன பைதனி பட்டு, இப்போது ‘டவுசர்’ சர்ச்சையில் சிக்கியிருப்பது மராட்டிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.