பிரபல நடிகர் கார்த்தி குமார் அவருடைய முன்னாள் மனைவி சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் படிக்காத பட்டியல் இன பெண்கள் தான் அசிங்கமாக பேசுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகர் கார்த்திக் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் பட்டியலின பெண்கள் குறித்து  அவதூறாக பேசவில்லை. அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரலும் கிடையாது. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Karthik Kumar (@evamkarthik)