
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கங்கா ரெட்டி (56) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் காரில் இருந்து கீழே இறங்கி வந்த ஒருவர் திடீரென அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள அந்த குற்றவாளியை வலைவீ சி தேடி வருகிறார்கள்.