நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதன் மூலப் பொருட்களான அமோனியம் நைட்ரேட்டின் மீது 10 சதவீதம் வரை சுங்கவரி உயர்ந்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தேநீர் குவளை மற்றும் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் கைப்பை மற்றும் கொடி போன்றவைகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது