தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த திருநர்கள் புதுமைப்பெண் மற்றும் பொது தமிழ் புதல்வன் திட்டம் உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் மற்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் வேலை பார்க்க வாய்ப்பு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.