கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகும் நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் தெரு நாய்கள் புகுந்துள்ளது.

அதாவது சம்பவ நாளில் அவருடைய மருமகள் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்த நிலையில் தெரு நாய்கள் வீட்டுக்குள் நுழைந்து படுத்த படுக்கையாக கிடந்த அஞ்சலையை கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே போன்று சமீபத்தில் சென்னையில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.