பாஜக கட்சியின் நிர்வாகி அலிஷா அப்துல்லா. இவர் திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருக்கும் நிலையில், இவருக்கு தொடர்ந்து ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த நபர் சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருந்துள்ளார். அவர் போதையில் தன்னுடன் படுக்க வருமாறும், தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் ஆபாசமாக பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அலிஷா அந்த நபர் இருக்கும் இடத்திற்கே சென்றார்.

அந்த நபரை கையும் களவுமாக அவர் பிடித்து தன் காரில் ஏற்றுக் கொண்டு நேரடியாக காவல் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தார். இது தொடர்பாக அலிஷா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் முதலில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆதங்கத்துடன் கூடிய அவர் பெரிய கட்சியில் இருக்கும் தனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்ன என்று கேட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.