
தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஒருவர் யாரை கொலை செய்யப் போகிறார் என ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஊடுருவி சென்று பார்க்க முடியாது என்று கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேரை போலீசார் கைது செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஒரு ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். அதற்காக தனிநபர் விரோதத்தினால் நடக்கும் கொலை சம்பவத்தை அரசோடு தொடர்புபடுத்துவது தவறு என தெரிவித்துள்ளார். அமைச்சர் ரகுபதியின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.