சீன நாட்டில் சோ  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் இவருடைய மனைவி கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். மனைவியின் பெயர் லீ. இவர்கள் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் இருவரும் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஸோவின் மனைவி லீ தான் இருக்கும் இடத்திற்கு சைக்கிள் வர முடிந்தால் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக சோ  தன் மனைவியுடன் இணைவதற்காக 4400கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்துள்ளார். மேலும் காதலுக்காக தன் மனைவியுடன் மீண்டும் இணைய சைக்கிளில் 4400 km தூரம் வரை ஒருவர் பயணம் செய்வது நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.