
உத்திரபிரதேசம் மாநிலம் புலாந்த்ஷர் என்ற பகுதியை சேர்ந்த அந்தன் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்துக் கொண்டே வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடித்த பல்லு திரைப்படத்தில் சஞ்சய் தத் கொலை செய்வதை பார்த்து தானும் இவ்வாறு செய்ததாக மீடியாவில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்னுடைய நண்பர்கள் தன்னை ஏமாற்றினாலும் அவர்களையும் இதே போல கொடூரமாக கொலை செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.