நடிகர் பிரபாஸ் சலார் பட குழுவினருக்கு தலா 10,000  ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆதிபுரூஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் படம் சலார்.

வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த ஒருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பிரபாஸின் செயலை பாராட்டி வருகின்றனர்