இளநீர் வாங்கும் போது அதிக தண்ணீர் உள்ள காயைத் தேர்ந்தெடுப்பது பலருக்கும் ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது. பொதுவாக பெரிய அளவில் இருக்கும் அல்லது குலுக்கினால் அதிக சத்தம் வரும் தேங்காய்களில் அதிக தண்ணீர் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் இந்த பொதுவான கருத்தை மாற்றியமைக்கிறான்.

மேலும் பெரிய இளநீரை வெட்டி அதில் குறைவான தண்ணீரே இருப்பதைக் காட்டும் அவன், பார்ப்பதற்குச் சாதாரணமான அல்லது சற்று உலர்ந்த நிலையில் இருக்கும் இளநீரில்தான் அதிக அளவு இனிப்பான தண்ணீர் இருக்கும் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறான்.

“>

இந்த வீடியோவில் அந்தச் சிறுவன் மூன்று விதமான இளநீர்களை ஒப்பிட்டுக் காட்டுகிறான். பார்ப்பதற்கு அழகாகவும், பச்சைப்பசேலெனவும் இருக்கும் இளநீரை விட, வெளிப்புறம் சற்று முதிர்ச்சியடைந்து தேங்காய் நார் போன்ற தோற்றமளிக்கும் இளநீரில்தான் அதிக அளவு நீர்ச்சத்து சேமிக்கப்பட்டிருக்கும் என்று அவன் கூறுகிறான்.

இந்நிலையில் இளநீரின் அளவு அல்லது அதன் வெளிப்புற நிறத்தை மட்டும் வைத்து அதன் உள்ளே இருக்கும் தண்ணீரின் அளவைக் கணிக்க முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும். சரியான இளநீரைத் தேர்ந்தெடுக்க இந்த எளிய நுணுக்கத்தை அறிந்திருப்பது அவசியம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.