சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அமித்ஷா என்ற பெண் தன்னுடைய மகனுக்காக பிறப்பு சான்றிதழ் வாங்க ஒரு வருடம் அரசு அலுவலகங்களை அழைந்த நிலையில் கடைசியாக அவருக்கு சான்றிதழ் கிடைத்தது. ஆனால் பிறப்பு சான்றிதழில் பிழை இருந்ததால் அதனை திருத்தம் செய்வதற்காக அவர் மீண்டும் அதிகாரிகளிடம் சென்றபோது அவர்கள் 500 லஞ்சம் கேட்டனர்.

ஆனால் மிகவும் வறுமையில் வாடிய அமிஷாவால் அந்த  தொகையை திரட்ட முடியவில்லை. இதனால் சாப்பாட்டுக்காக இருந்த அரிசியை சந்தையில் எடுத்து சென்று விற்பனை செய்து அதனை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த சான்றிதழை பின்னர் பெற்றுள்ளார். ஒரு குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் என்பது முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக திகழ்வதோடு கல்விக்கான முக்கிய அம்சமாகவும் திகழ்கிறது.

 

ஆனால் தங்கள் உணவுக்காக வைத்திருந்த அரிசியை அந்த தாய் விற்பனை செய்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த சான்றிதழை வாங்கியுள்ளது மிகவும் வேதனையாக மாறியுள்ள நிலையில் இது நிர்வாக தோல்வியை காட்டுகிறது என்று பலரும் விமர்சித்து  வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அந்த ஏழைத்தாய் கண்ணீரோடு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது நெஞ்சையும் உலுக்கியுள்ளது ‌