கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து விடமுடியாது.

இந்நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்துக் கொள்ளலாம். தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.