இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஐந்து அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள், ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்களுக்கு எம்சி எல் ஆர் விகிதம் அதிகரித்துள்ளது. எம் சி எல் ஆர் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது கடன் வாங்கியவர்கள் செலுத்தும் இஎம்ஐ அதிக சுமையாக மாறும். இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ் பி ஐ வங்கி அறிவித்துள்ளது.