தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் நான்கு ஆண்டு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த படிப்புக்கு டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர்க்கை வருகின்ற ஜூலை 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0422-2590080, 9486977757 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.