ஆந்திர மாநிலம் சித்தூரில் மகா சமுத்திரம் டோல்கேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நேரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்தது. அப்போது ஒரு பேருந்தின் கண்ணாடி மற்றொரு பேருந்தில் மோதியதால் ஓட்டுநர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. இவர்களுக்கிடையே மோதல் முற்றிய நிலையில் ஒரு பேருந்தின் ஓட்டுனர் மட்டும் கீழே இறங்கினார். அவருடைய பெயர் ராஜு. இவர் மற்றொரு தனியார் பேருந்தின் முன் நின்றார்.

உடனே அந்த பேருந்தின் ஓட்டுனர் சீனிவாச ராவ் தன்னுடைய பேருந்தை முன்னோக்கி ஓட்டினார். இதில் ராஜு பேருந்து சக்கரத்தில் சிக்கிய நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை இழுத்துச் சென்றார். இதில் தலை மற்றும் முகம் நசுங்கி ராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீனிவாச ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உயிரிழந்த ராஜூவுக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.