காசியாபாத் வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் படிக்கட்டில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், நகரும் படிக்கட்டில் ஏறும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறியுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளில், அந்தப் பெண் படிக்கட்டுகளில் இருந்து உருண்டு விழுவது பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
A woman fell from an escalator at Indirapuram Habitat Centre in Ghaziabad. pic.twitter.com/XfBx1kmBF7
— Greater Noida West (@GreaterNoidaW) February 12, 2026
“>
இருப்பினும், இந்த விபத்து குறித்து இணையவாசிகள் இடையே ஒரு விவாதம் எழுந்துள்ளது. அந்தப் பெண் தானாக நிலைதடுமாறி விழுந்தாரா அல்லது அவருடன் வந்த நபர் அவரை வேண்டுமென்றே தள்ளிவிட்டாரா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் பின்னால் ஒரு நபர் நிற்பது தெரிவதால், “அந்த நபர் திட்டமிட்டே அவரை தள்ளினாரா?” என்ற கேள்வியை சமூக வலைதளப் பயனர்கள் முன்வைக்கின்றனர். இது விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
