ஒடிசா மாநிலத்தில் மகளிர் விடுதிக்குள் புகுந்து எம்.பி.ஏ மாணவி ஒருவரை 67 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வர் அருகே உள்ள கங்காபதா பகுதியைச் சேர்ந்த தீபக் பிரதான் என்ற முதியவர், அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
மேலும் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, தனது கடைக்கு அருகில் உள்ள மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த மாணவியைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து இன்போ வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் தீபக் பிரதான் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான மகளிர் விடுதிக்குள் முதியவர் எவ்வாறு நுழைந்தார் என்பது குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
