ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் அவ்வப்போது இரண்டு நாடுகளும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் டான்யூப் ஆற்றின்  துறைமுகத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது ருமேனியா நாட்டின் எல்லைக்குள் அந்த ட்ரோன் விழுந்து வெடித்ததாக  உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு துறை  அமைச்சகம் கூறுகையில் “ரஷ்யாவின் ட்ரோன்கள் ருமேனியா பகுதியில் விழுந்து வெடித்து சிதறி உள்ளது.

ருமேனியாவின் குறுக்கே அமைந்துள்ள துறைமுகத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு புகைப்படங்கள் ஆதாரமாக எங்களிடம் இருக்கிறது” என தெரிவித்துள்ளது. ஆனால் ருமேனியா  அரசு ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் பிரதேசத்தில் விழுந்திருக்கும் என்ற தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. நோட்டா அமைப்பின் உறுப்பு நாடான ருமேனியா மீது தாக்குதல் மேற்கொண்டால் அதற்கு பதிலடி கொடுக்க மற்ற நாடுகள் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.