தற்போதைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள், குழந்தைகளிடையே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். அதன்படி, தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்.

தூங்குவதற்கு முன் உங்களை அமைதிப்படுத்த மற்ற விஷயங்களைச் செய்யுங்கள். செல்போன் தூண்டுதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்கவும். சுவாச பயிற்சிகள் செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்களை வெல்லுங்கள். தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.