பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தன்னை குறித்து அனைத்து தகவலையும் தெரிந்தவர் செந்தில் பாலாஜி என்பதால் முதல்வர் ஸ்டாலின் இப்போது பதறுகிறார் என ஜெயக்குமார் கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவரை முதல்வர் பார்க்க செல்வது சட்டவிரோதம். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். நேற்றுவரை நடைபயிற்சி மேற்கொண்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்தது எப்படி?” என்று விமர்சத்துள்ளார்.