
பயணிகளுடைய நலனை கருதி கொண்டு பல்வேறு விழாக்கள் மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே இன்று இயக்க இருக்கிறது .
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் முற்பகல் 11 .0 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும் .இந்த ரயிலானது எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று கடைசியாக நெல்லை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.