
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகர் பகுதியில் தனக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முத்துக்குமார் (38). இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரிடம் நட்பாக பழகியுள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் இவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் பிட்டர் ஆக வேலை பார்த்து வருபவரின் மனைவி முத்துக்குமார் வீட்டுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்றுள்ளார்.
அப்போது முத்துக்குமார் அவருக்கு ஜூஸ் கொடுத்த நிலையில் அதனை குறித்து சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கி விடவே பின்னர் அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்களை காண்பித்து நண்பரின் மனைவியிடம் இருந்து அடிக்கடி மிரட்டி பணம் பறித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று மற்றொரு பெண்ணையும் ஆபாசமாக புகைப்படம் எடுத்து வீடியோ மிரட்டியது தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.