விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலகாந்திநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கும் முத்துராஜின் நண்பருக்கும் திருமணம் நடந்தது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் உனக்கு என்னை பிடித்ததா.. இல்லையா என தெரியவில்லை.

ஆனால் நீ எங்க இருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என வீடியோ பதிவு செய்துள்ளார். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்து ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.