
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார்.
இவரை TVK அக்கா என்று அழைத்த நிலையில் தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் மூன்று மாதங்களாக அதிர்ச்சியில் இருக்கிறேன். நீ எல்லாம் ஒரு பெண்ணா. உனக்கு எதற்கு அரசியல். நீ ஒழுங்கா வீட்டுக்குள் இரு. உனக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் போன்ற வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன்.
ஆனால் நான் எந்த தளத்தில் இருந்தாலும் மக்களுக்கான சேவைகளை செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். மேலும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.