
உத்திரபிரதேச மாநிலம் மீரட் என்னும் கிராமத்தில் ஹசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் ஏதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்துனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். அதன்பின் காவல்துறையினர் பெண்ணின் காதலன் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹசன் வேறு நபரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தங்கையிடம் கூறினார். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஹசன் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார்.
இதில் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஹசனை கைது செய்ததுடன் இச்சம்பவத்தை பற்றி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.