
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்ட விவாதம் நடைபெறும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த வாரம் பத்து வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள், எப்படி என ஆச்சரியப்படும் 2K பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.
அதில் ஒரு ஜோடி தான் காதலிக்கும் போது 18 முறை வீட்டில் அடி வாங்கியதாகவும் தற்போது இவரை போன்று மாப்பிள்ளை கிடையாது என்று கூறுவதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆதங்கப்பட்ட கோபிநாத் தனது ஃப்ளாஷ்பேக் சென்று உண்மையை கூறியுள்ளார். மற்றொரு ப்ரோமோ வீடியோவில் பெண்ணின் தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரிழந்து விடுவதாக மிரட்டி உள்ளார். ஆனால் அதனை கண்டு கொள்ளாத அந்த பெண் விரும்பிய வரை திருமணம் செய்துள்ளார். தற்போது இந்த ப்ரோமோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.