
தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் எக்ஸாமினர், ரீடர், சீனியர் ஃபெயிலிப், ஜூனியர் ஃபெயிலிப், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.mch.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.