
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அனில் குமார் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிஜா (50) என்ற மனைவியும், 25 வயதில் அஸ்வின் என்ற மகனும், 22 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அனில் குமார் ஒரு கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அனில் குமார் திடீரென நேற்று காலை தன் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் போலீசார் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 4 பேரும் வீட்டில் சடலமாக கிடந்தனர். இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர்கள் நால்வரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்கள் கடன் பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.