
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிலையில் இந்த விழாவிற்கு நடிகர் விஜய் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவின்போது நடிகர் விஜய் பேசியதாவது, உங்கள் குழந்தைகள் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள்.
அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி வழி நடத்துங்கள். நீட் மட்டும் தான் உலகமா. நீட் தேர்வை தாண்டி இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது.
அதை தாண்டி இந்த உலகில் சாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். தேர்தலில் வாக்கு செலுத்த யாரும் பணம் பெற கூடாது. யுபிஎஸ்சி தேர்வில் பெரியாருக்கே ஜாதி சாயம் பூசம் முயற்சி செய்கிறார்கள்.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாருக்கு ஜாதி சாயம் பூசுவது போல் ஒரு கேள்வி கேட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார். மேலும் ஜாதி மற்றும் மதத்தை வைத்து பிரிவினையை உண்டாக்கும் அந்தப்பக்கம் நீங்கள் போய்விடாதீர்கள். உங்களை அந்த சிந்தனைகள் டிஸ்டர்ப் செய்யாத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.