அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகள் ஒட்டுமொத்த இந்திய கல்வித் துறையையே உலுக்கியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதற்காக 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி நடத்தவிருந்த பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்க்கட்சிகள் இவரின் நிர்வாகத் தோல்வியைக் கடுமையாகச் சாடி வருகின்றன.

ஒடிசாவின் தால்செர் பகுதியில் 1969-ம் ஆண்டு பிறந்த தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகன் என்ற அரசியல் பின்னணியைக் கொண்டவர் ஆவார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி (ABVP) மூலம் தனது பொதுவாழ்வைத் தொடங்கிய இவர், 2004-ல் தியோகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கும், பின்னர் 2012-ல் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 2014 முதல் முக்கியத் தூணாக விளங்கும் இவர், 2014 முதல் 2021 வரை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக மிக நீண்ட காலம் பணியாற்றிச் சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2021 ஜூலை மாதம் மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான், 2024 தேர்தலில் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் வென்று மீண்டும் அதே துறையின் அமைச்சராக நீடித்து வருகிறார். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது, மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் மத்திய அரசு கல்வி நிதியை முடக்கிய சமயத்தில், திமுக அரசு அரசியலுக்காகவே இதனை எதிர்க்கிறது என்று கூறி இவர் கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்டார்.

தற்போது நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்தக் குளறுபடிகளுக்குத் தேசிய தேர்வு முகமையைக் கண்காணிக்கத் தவறிய இவரே பொறுப்பேற்க வேண்டும் எனப் போராட்டங்கள் வலுத்து