இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கடன் திட்டங்களுக்கான விதிமுறையில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கிரெடிட் ஸ்கோர் விதிகளில் ஐந்து மாற்றங்கள் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன் அறிக்கையை சரிபார்க்கும் விஷயங்களை வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டும் எனவும் இதனை எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் வாடிக்கையாளர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கும் போது அதற்கான உரிய காரணத்தை வங்கிகள் விரிவாக கூற வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன் அறிக்கைகளை முழுமையாக தயாரித்து அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இதனால் வாடிக்கையாளர்கள் கடன் குறித்த தகவல்கள் அனைத்தையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் வங்கிகள் வாடிக்கையாளரை கடன் திருப்பி செலுத்தாதவர் என்று அறிவிப்பதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கடனை திருப்பி செலுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு பாதகங்கள் எதுவும் இருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் புகார்களை 30 நாட்களுக்குள் தீர்க்கவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் அபராதத்தை வாடிக்கையாளர்களுக்கு வங்கி செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.