இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாக SBI வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்திருக்கிறார்.

சிறுகுறு வங்கிகள் மற்றும் தனியார் கடன் செயலிகள் வரைமுறை இல்லாமல் கடன் கொடுப்பதை தடுக்க RBI பல புதிய விதிமுறைகளை கொண்டுவர இருக்கிறது. இந்த விதிமுறைகள் வந்தால் SBI போன்ற பெரிய வங்கிகளும் பாதிக்கப்படும் என்றும் அது வட்டி உயர்வில் போய் முடிவும் என்றும் காரா பேசியிருக்கிறார்.