
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக குவைத் சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்களிடம் பேசி உள்ளார். அப்போது ஒரு தொழிலாளி நீங்கள் மெடிக்கல் லீவ் எடுக்குறீங்களா சார்?என கேள்வி கேட்டார். அதற்கு பிரதமர் மோடி தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து தன் தமிழர் என ஒருவர் அறிமுகப்படுத்தியவுடன் பிரதமர் மோடி அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து குவைத்தின் அமீருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.