தஞ்சாவூர் முனிசிபல் காலனி ஒன்பதாவது குறுக்குத் தெருவில், தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

17 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மதனகோபால் இறந்தபோது குடும்பம் ஏற்கனவே இழப்பைச் சந்தித்தது. அதன்பிறகு இவரது மனைவி ஈஸ்வரி (59), மகன் ராகுல் (29) ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். பொறியியல் பட்டதாரியான ராகுல், பண்ணை மற்றும் சிறு வியாபாரம் செய்து வந்தார். அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஈஸ்வரி, தனது மகனுக்கு மணப்பெண்ணை தேடி வந்தார்.

கடந்த நான்கு நாட்களாக வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது.  வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, ஈஸ்வரி தரையில் பிணமாக கிடந்ததையும், ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையும் கண்டனர்.

போலீசார் ராகுல் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினார். அந்த கடிதத்தில் நான் வெளியே சென்று விட்டு திரும்பும் போது கழிப்பறையில் எனது அம்மா மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். ஏற்கனவே எனது தந்தை இறந்த நிலையில் தாயும் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.