
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் கட்டண உயர்வுக்குப் பிறகு ஜியோ தனது வருடாந்திர பிரீபெய்டு திட்டங்களில் இரண்டை மட்டுமே வழங்கியுள்ளது. 1.5 ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.3,999 திட்டத்தில், ஃபேன்கோடு, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா சேவைகள், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு உள்ளிட்டவற்றை பெறலாம். ரூ.3,599 திட்டத்தில் ஃபேன்கோடு தவிர மேலே உள்ள திட்டத்தில் உள்ள மற்ற அனைத்து சேவைகளும் அடங்கும்.