தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியின் போது மேகதாது அணை விவாதத்தை காவிரி ஆணையத்தில் அனுமதித்தது இல்லை. தமிழக அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது என இபிஎஸ் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது. அவர்கள் நிதி ஒதுக்கினாலோ, ஆவேசமாக பேசினாலோ அச்சப்பட தேவையில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் திமுக அரசு அனுமதிக்காது என கூறியுள்ளார்.