மருத்துவர்கள் மருந்து சீட்டில் கேபிடல் (CAPITAL) எழுத்தில் தான் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவியை நாடி செல்லும் நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகள் தொடர்பான எழுத்துக்களை மருத்துவர்கள் தெளிவாகவும், கேபிடல் எழுத்தில் இருக்க வேண்டும் என்றும்  மத்திய அரசானது தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருத்துவ சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ உதவியை நாடி மருத்துவர்களை சென்று பார்க்கும் போது அவர்களுக்கு தேவையான மருந்துகள், மற்றும் மாத்திரைகள் மருத்துவ சீட்டில் எழுதப்படுவது வழக்கம். இதுபோன்று எழுதப்படும் மருந்து சீட்டுகள் மருந்து கடைகளில் கொடுக்கும்போது அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் புரியாமல் இருப்பதால் இது போன்ற நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதில், அனைத்து அரசு, தனியார் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு புரியும் வகையில் கேப்பிடல் எழுத்துக்களில் இருக்க வேண்டும் எனவும், அந்தந்த மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என கூறியிருந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய  அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் தொடர்பான உத்தரவை பின்பற்ற வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவும் வாய்வழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் ஊரக நல பணி இயக்ககம் மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இது போன்ற நோயாளிகளுக்கு எழுதப்படும் மருந்துகள் தெளிவாக புரிய வேண்டும் என்பதற்காகவும், மருந்து கடைகளில் மருந்து சீட்டினை கொடுக்கும் போது மருந்து கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்களும் இந்த மருந்து தொடர்பான ஏதேனும் தவறு நடக்காமல் இருப்பதற்காக விரிவாகவும் கேப்பிட்டல் எழுத்தில் எழுத வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் எழுத்துக்கள் அமைய வேண்டும் என்றும், கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் செயலகம் உத்தர பிறப்பித்துள்ளது.