இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ள நிலையில் அவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எளிதில் ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்துச் செல்கின்றனர். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். அதாவது நம்முடைய வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஏடிஎம் பயன்படுத்தும் அனைவரும் சில தவறுகளை செய்யக்கூடாது. அதே சமயம் ஏடிஎம்மில் என்னென்ன விஷயங்கள் செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

நீங்கள் ஏடிஎம் கார்டை கொடுக்கப்பட்டுள்ள ஸ்லாட்டில் சொருகிய பிறகு உங்களுக்கான பின் நம்பரை போட்டு எந்த ஒரு பரிவர்த்தனையை தேர்வு செய்து கொள்ளலாம்.

வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான மினி ஸ்டேட்மென்ட்டை பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு பேமெண்ட் செய்து கொள்ள முடியும்.

வங்கி கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றம் செய்யலாம்

ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்த முடியும்.

ஏடிஎம் களில் டைனமிக் கரன்சி மாற்றம் செய்து கொள்ள முடியும்.

எந்த ஒரு பில்லாக இருந்தாலும் ஏடிஎம்மில் செலுத்தலாம்.
மொபைல் வங்கிக்கு பதிவு செய்ய முடியும். ஏடிஎம் பின் நம்பரை எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.

உங்களின் வங்கிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட இலவச வரம்புக்கு மேல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு வங்கிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் இதனை வாடிக்கையாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.